முல்லைத்தீவில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் வீடு முற்றாக தீக்கிரை
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் வீடொன்றுக்கு வைக்கப்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்துள்ளது.
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள் அருகிலுள்ள உறவினர் வீட்டில் இரவு நேரங்களில் தங்குவது வழமை.
இதனையடுத்து நேற்றிரவும்(06) வழமைப்போல அவர்கள் அயலவர் வீட்டுக்குச் சென்ற நேரத்தில் இனந்தெரியாத நபர்களினால் குறித்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் குறித்த பெண் தலைமை குடும்பம் முறையிட்டதையடுத்து அவர் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.