பரந்தன் – புதுக்குடியிருப்பு வீதியில் முச்சக்கரவண்டி விபத்து : சாரதி காயம்

ஏ-35, பரந்தன் – புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கைவேலிப் பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியொன்று, மதகு ஒன்றுடன் மோதியதில், முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயமடைந்து, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (07) மதியம் இடம்பெற்ற இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like