வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த தேர்த்திருவிழா (படத்தொகுப்பு இணைப்பு)

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் துர்முகி  வருடத்துக்கான  மகோற்சவம் (31.01.2017) கொடி ஏற்றதுடன் ஆரம்பமானது. நேற்றையதினம் சப்பறத்திருவிழா நடைபெற்றதுடன் இன்றைய தினம் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றது.

தீர்த்தோற்சவம் (09.02.2017), 1008 சங்காபிஷேகம் (10.02.2017), திருக்கல்யாணம் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் குருக்குத்தெரு வீதி வழியாக வந்த தேர் வவுனியா மணிக்கூட்டுசந்தி , கந்தசுவாமி கோவில் வீதியுடாக ஆலயத்தினை வந்தடைந்தது.

இவ் தேர்த்திருவிழாவில் பெருந்தலவான பக்த அடியார்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தனர்.

மேளவாத்தியம் முழங்க பக்த அடியவர்கள் அரோகரா அரோகரா கூறியவாறு தேரினை பிடித்து இழுப்பதனை அவதானிக்க முடிந்தது.

 

You might also like