வவுனியாவில் வெற்றிலை வியாபாரம் செய்த வயோதிபர் மீது தாக்குதல்

வவுனியாவில் நடைபாதையில் வெற்றிலை சுற்றி வியாபாரம் மேற்கொண்டு வரும் வயோதிபர் மீது வியாபார நிலைய உரிமையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தமது வியாபார நிலையத்திற்கு முன்னால் நின்று வியாபாரம் மேற்கொள்ளவேண்டாம் என்று தெரிவித்து குறித்த வயோதிபரை கீழே தள்ளியுள்ளார்.

இதன்போது வயோதிபரிடமிருந்த வியாபாரம் மேற்கொள்ளும் வெற்றிலை, வெற்றிலை சுருள் என்பனவற்றையும் குறித்த வியாபார நிலைய உரிமையாளர் வீதியில் வீசியுள்ளார்.

இந்த சம்பவம் வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இன்று(08.02.2017) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like