கிளிநொச்சியில் நண்பரின் முச்சக்கர வண்டியை செலுத்திய 18 வயது இளைஞன் பலி

கிளிநொச்சி புதுக்காட்டு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளான்.

18 வயதே ஆன குறித்த இளைஞன் நண்பனின் முச்சக்கரவண்டியை வீதியில் செலுத்தி சென்ற போது மரம் ஒன்றுடன் மோதி தடம்புரண்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவன் பிரபல பாடசாலை ஒன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் ஞானராசா வசந்தன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனது வீட்டுக்கு முன்பாக நண்பன் கொண்டுவந்த பாண் விற்கும் முச்சக்கரவண்டியை வாங்கி செலுத்த முற்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குறித்த விபத்து காரணமாகவே இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

You might also like