கேப்பாபுலவு போராட்டத்தில் யுவதிகளின் நிலை…

படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு பகலாக இடம்பெறும் இந்த போராட்டத்தில், சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், குறித்த காணி மீட்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள யுவதிகளை பார்க்கும் போது,

தமது காணி மீட்பு போராட்டத்தில் இருந்து ஒரு போதும் பின்வாங்க போவதில்லை என்பதை எடுத்து காட்டுகின்றது. இந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் செல்லும் மனநிலையில் இல்லை.

மாறாக உறுதியுடனும், உற்சாகமாகவும் இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் மனநிலையிலேயே இருக்கின்றனர். எனவே, நல்லாட்சி அரசு இந்த மக்களின் நியாயமான போராட்டத்தினை ஏற்று, அவர்களுக்கு விரைவாக தீர்வை வழங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

You might also like