கிளிநொச்சியில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு : விவசாயிகள் விசனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை நிறைவடையும் நிலையில், அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்யாத காரணத்தால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கம் ஒரு கிலோ நெல்லிற்கு 32 ரூபா விலை நிர்ணயம் செய்துள்ள போதும் வியாபாரிகள் 22 ரூபா அறுபது சதத்திற்கே விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அறுவடை செய்தவுடன் நெல்லை விற்பனை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதனால், தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக குறிப்பிடும் விவசாயிகள்,

நெல்லிற்கான விலை உயரும் வரை, காத்திருந்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாது எனவும் அரிவிவெட்டுவதற்கென பயன்படுத்தும் அறுவடை இயந்திரம் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கும் உடனடியாக அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தபோதும் அவர்கள் இது தொடபாக நடவடிக்கை எடுப்பதாக மாத்திரமே தெரிவித்துள்ளதாகவும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like