வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மாடியிலிருந்து குதித்து இரானுவ வீரர் தற்கொலை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று ( 10.02.2017) இரவு 11.45மணியளவில் தற்கொலை செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இரானுவ வீரர் வைத்தியசாலை அவரச கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

கடந்த 05.02.2017 அன்று இரானுவ வீரர் நுவான் கேஜி ( வயது – 27) கிருமிநாசினி அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.அதன் பின்னர் 14ம் வாட்டிக்கு மாற்றப்பட்ட குறித்த இரானுவ வீரர் நேற்று (10.02.2017) இரவு 11.45மணியளவில் வைத்தியசாலை மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் கால் இரண்டும் உடைந்த நிலையில் உயிர்பிழைத்த இரானுவ வீரர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்ட போது,

தற்போது குறித்த இரானுவவீரரின் கால்கள் இரண்டினையும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

You might also like