முல்லைத்தீவில் ஆபத்தான பாலத்தை கடக்கும் கனரவாகனங்கள்

முல்லைத்தீவு கோயில்குடியிருப்பு கிராமசோவையாளர் பிரிவு A35 பிரதான வீதியில் காணப்படும் பாலம் ஒன்று மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றது.

கடந்த மாதம் இந்த வீதியால் பாரஊர்திகள் பயணிப்பதற்கு தடைவிதித்து அறிவித்தல் பலகை ஒன்றும் நாட்டப்பட்டது.

இந்த நிலையில், பாலத்தை புனரமைப்பதற்கான வேலைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என மக்களினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட வீதி அதிகார சபை தலைமைப் பொறியிலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வீதிக்குப் பதிலாக செல்வபுரம் பகுதியூடாக செல்லும் வீதியை பயன்படுத்துமாறும் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் சேதமடைந்த பாலத்தை புனரமைப்பதற்கான திட்டவரைபு எங்களால் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்குரிய நிதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் பாலம் புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆபத்தான பாலத்தினை கனரக வாகனங்கள் தற்பொழுது கடந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like