கிளிநொச்சியில் வயல்நிலங்களுக்கு உரிய முறையில் நீர் வழங்கததால் பயிர் செய்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு

கிளிநொச்சி முரசுமோட்டை ஊரியான் விவசாயிகளின் நெற்செய்கைக்கு உரிய முறையில் தண்ணீர் வழங்காது வாய்க்கால் மேற்பார்வையாளர் பாரபட்சம் காட்டி வருவதாக விவசாயிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தினுடைய நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில் இரமைடுக்குளத்தின் கீழான குளத்தின் கீழான பயிர் செய்கைகளுக்கு இருக்கின்ற நீரைப் பங்கிட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முரசுமோட்டை ஊரியான் ஆகியபகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாயிரம் ஏக்கர்வரையான வயல்நிலங்களுக்கு உரிய முறையில் நீர் வழங்காது தங்களளுடைய பயிர் செய்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவிவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்கின்ற வாய்க்கால் முழுயைமாக பூட்டப்பட்டு வேறொரு பகுதியில் பாரியளவில் பயிர்ச்செய்கை மேற்கொள்கின்ற ஆசிரியர் ஒருவரினதும பெருமளவான நெற்செய்கைக்கும் ஏனைய வயல் நிலங்கள் மற்றும் அதற்குள் அடங்குகின்ற 150 ஏக்கருக்கும் குறைவான காணிகளுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படடு வருகின்றது. இதனால் குறித்த செற்பாடானது வாய்க்கால் மேற்பார்வையாளருடைய திட்டமிட்டசெயற்பாடே என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பொறியியலாளர் என்.சுதாகரன் மற்றும் கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசனப்பொறியியலாளர் செந்தூரன் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக பல தடவைகள் தொடர்புகொள்ளமுற்பட்டபோது அவர்கள் பதலளிக்கவில்லை.

இதேவேளை பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிளிநொச்சி மாவட்ட சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

You might also like