சற்று முன் வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் (படங்கள் இணைப்பு)

வவுனியாவில் இன்று(11) பிற்பகல் 2.30மணியளவில் தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக  இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் நின்று கொண்டுள்ளது. பின்னால் வந்த டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துடன் மோதியுள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்த நடேசபிள்ளை கமலாகரன் வயது 36 கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நபரும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் வயது 38 வவுனியா ஆகிய இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்.

You might also like