கிளிநொச்சி மாவட்டத்தில் அரிசியின் விலை அதிகரிப்பு! மக்கள் பாதிப்பு!

நாடளாவிய ரீதியில் நெல் அரிசியின் விலையை அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைஆக்கியதாக அறிவித்துள்ள போதிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் வர்த்தகநிலையங்களில் மிகவும் அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதால் மக்கள்மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

கிளிநொச்சியில் மக்கள் அதிக விலைக்கே அரிசியைக் கொள்வனவு செய்கின்றார்கள்.இதனால் அன்றாட கூலித் தொழிலாளர்களது குடும்பங்கள் அரிசிவாங்குவதில் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றன.

நெல் அரிசி விலை கட்டுப்பாட்டு விலை ஆக்கப்பட்ட போதிலும் கிளிநொச்சிமாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றில் அரிசியின் விலை 100ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டம்நெல் உற்பத்தியில் தன்னிறைவைக் கண்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் இந்தநிலையே தொடர்கின்றது.

அரச கட்டுப்பாட்டு விலையின்படி ஒரு கிலோகிராம் நாட்டரிசி- 72 ரூபா, சம்பா-80 ரூபா, சிவப்பரிசி- 70 ரூபா என அறிவிக்கப்பட்ட போதிலும் கிளிநொச்சிமாவட்டத்திலுள்ள உள்ளூர் வர்த்தக நிலையங்கள் உட்படப் பல வர்த்தக நிலையங்களில்ஒரு கிலோகிராம் அரிசி 100 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றில்விற்கப்படும் பொருட்கள் பற்றிய விலைப்பட்டியல்கள் எவையும்காட்சிப்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது.

இதனால் உள்ளூர் வர்த்தகநிலையங்கள் பலவற்றில் அத்தியாவசியப் பொருட்கள் கொள்ளை இலாபத்திற்கு விற்பனைசெய்யப்படுவதாக மக்கள் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர்.

மக்களின் பிரதான உணவான நெல் அரிசி கிளிநொச்சியில் அதிக விலைக்குவிற்கப்படுவதால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்கள் அன்றாட உணவுத் தேவையைப்பூர்த்தி செய்வதில் பாரிய கஸ்ட நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள்.

விவசாய மாவட்டமான கிளிநொச்சியில் அரிசியின் விலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுவிலையையும் மீறி அதிக விலைக்கு விற்கப்படும் அதேவேளை கிளிநொச்சியில்விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வோர் ஒரு மூடை நெல் 2600ரூபாவுக்கே கொள்வனவு செய்கின்றார்கள்.

கிளிநொச்சியிலிருந்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படும் நெல் வெளி மாவட்டங்களுக்கே மூடை மூடையாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், நெல் சந்தைப்படுத்தும் சபையில்களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற் களஞ்சியங்களிலிருந்து கிளிநொச்சிமாவட்டத்திலுள்ள ஒவ்வொரு உள்ளூர் அரிசி உற்பத்தி மில் ஆலைகளுக்கும் தலா ஒருஇலட்சம் கிலோகிராம் நெல்லினை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்வாறு வழங்கப்பட்டால்கிளிநொச்சி மாவட்டத்தின் அரிசித் தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் எனவும்இதனால் அரிசியின் அதிகரித்த விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்எனவும் அண்மையில் அறிவித்திருந்தார்.

மக்களின் அன்றாட உணவுத் தேவைக்கான, பிரதான உணவான நெல் அரிசியின் விலையைக்கட்டுப்பாட்டு விலையில் வர்த்தக நிலையங்களில் பெற்றுக்கொள்வதற்கு கிளிநொச்சிமாவட்ட விலைக்கட்டுப்பாட்டுப் பிரிவினர் தாமதிக்காது உடனடி நடவடிக்கை எடுத்துஉதவ வேண்டுமென இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரி நிற்கின்றார்கள்.

You might also like