போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பூநகரி மாணவா்கள்

பூநகரி பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலும் இருந்தும் பூநகரி மகா வித்தியாலயத்திற்கு வரும் மாணவா்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பெற்றோா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

சீரான பேரூந்து சேவைகள் இன்மையால் உரிய நேரத்தில் பாடசாலைக்கு செல்வதில் நாளாந்தம் மாணவா்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனா்.

கௌதாரிமுனை, பரமன்கிராய், பள்ளிக்குடா உட்பட பல கிராமங்களின் மாணவர்கள் காலை வேளைகளில்பேருந்துகளில் பாடசாலைகளுக்கு வந்தாலும் மாலை வேளையில் மாணவர்கள் வீடு திரும்புவதில் பேரூந்துகள் இல்லாததன் காரணமாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

பூநகரிப் பிரதேசத்தினைப் பொறுத்த வரை நீண்ட தூரங்களில் உள்ள கிராமங்களில் இருந்து முதன்மைப் பாடசாலையான பூநகரி மகா வித்தியாலயத்திற்கு மாணவர்கள் வருகை தருவதில் நெருக்கடி நிலைமை உள்ளதாக பெற்றோர்களினால் தொடர்ச்சியாக கல்வி அதிகாரிகளிடம், அரசியல்வாதிகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

You might also like