வவுனியாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சண்முகபுரம் பகுதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (11.02.2017) வழங்கிவைக்கப்பட்டது.

சண்முகபுரம் அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் திருமதி. ஞ.சிவானி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட சிறிலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம. ஆனந்தராஜ், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பூசகர் மு. கணேசன், அறநெறிப்பாடசாலையின் உதவி ஆசிரியர் திருமதி.தே.தட்சாயினி,சனாதன சன்மார்க்க பீடாதி சிவதர்சன் குருக்கள், கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் இ. ராகவன், சிறுவர் பாதுகாப்புத் தலைவி திருமதி கமலகுமாரி, மாதர் சங்கத் தலைவி துஷ்யந்தினி மற்றும் அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டதுடன்

அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் வசதியற்ற 32 மாணவர்களுக்கு வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் கற்றல் உபகரணங்களும், விளையாட்டு கழகத்திற்கு உபகரணங்கள், அறநெறி பாடசாலை ஆரம்ப கட்டட நிதிக்கு ஒரு தொகை காசோலை என்பன வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

You might also like