கொழும்பு செல்வதாக சென்ற வவுனியாவை சேர்ந்த முதியவரை காணவில்லை

வவுனியா கற்பகபுரம் முதலாம் ஒழுங்கையை வசிப்பிடமாக கொண்ட கருப்பையா ரங்கநாதன் (வயது75) காணாமல் போயுள்ளார்.

கடந்த வருடம் பத்தாம் மாதம் கொழும்பில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற இவர் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளதுடன் அவரது குடும்பத்தினரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

390170190v என்ற அடையாள அட்டையை கொண்ட இவர் இறுதியாக வெள்ளை வேட்டி சட்டையுடன் சால்வை அணிந்திருந்தார்.

இவர் தொடர்பான விபரங்கள் அறிந்தவர்கள் 0770699949 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

You might also like