வவுனியாவில் டெங்கு நுளம்பை ஒழிக்க வவுனியா பொது சுகாதார பணிமனையினரின் அதிரடி நடவடிக்கை

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை நேற்று (12.02.2017) மேற்கொள்ளப்பட்டுள்ளளது.

நெளுக்களம் பொலிஸாரும், வவுனியா பொது சுகாதார பணிமனையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், பட்டாணிச்சூர் கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீடு வீடாகச் சென்று மக்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அமைந்திருந்த பாடசாலை, பள்ளிவாசல், வாகனங்கள் திருத்தும் இடங்கள், பொதுமக்களின் வீடுகள் என்பவற்றில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நுளம்பு பெரும் இடங்களும் அழிக்கப்பட்டன.

மேலும், டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்வில் வைத்தியர் லவன், பொது சுகாதார பரிசோதகர் வாகீசன், நெளுக்குளம் பொலிஸ் உத்தியோகஸ்தர், கிராம சேவையாளர் தவராசா, சமுதாய பாதுகாப்பு குழு தலைவர் நாகூர்கனி ஸாபி, அதன் பொருளாளர் ஜெமீல் மற்றும் எமது பகுதி சமுதாய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

You might also like