கேப்பாப்புலவில் 13 ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடரும் மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணிகளில் இருந்து இலங்கை விமானப்படையினர் வெளியேற வேண்டும் என கோரி 13 நாளாக இன்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தீர்வின்றி தொடரும் போராட்டத்தின் காரணமாக அங்கே சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாங்கள் இவ்விடத்தை விட்டு போனால் அது எங்கள் பூர்விக நிலங்களுக்குத்தான் என்றும் வேறு இடங்களுக்கு செல்ல முடியும். எமது நிலம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் திடமாக அறிவித்துள்ளனர்.

You might also like