கிளிநொச்சி பொலிஸாரால் கேரள கஞ்சா மீட்பு

வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கிளிநாச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரிதி பொலிஸ்மா அதிபரிற்கு கிடைத்த தகவலுக்க மைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரள கஞ்சா இவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டும் மற்றும் அதி வலு கொண்ட இஞ்சின் இரண்டும் பொலிசாரால் மீட்கப்பட்டது.

இதேவேளை சந்தேக நபர்களை 7 நாட்களுக்கு பொலிஸ் விசாரணைக் குட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் 23 கிலோ கேரள கஞ்சாவினை நேற்று மீட்டுள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச, உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டதுடன், நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை பாராட்டியிருந்தனர்.

குறித்த நடவடிக்கையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவினால் நியமிக்கப்பட்ட மது ஒழிப்பு விசேட குழுவுடன் பளை பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச உள்ளிட்ட உயரதிகாரிகளின் வழி நடத்தலில் பளை பொலிஸாரால் பல லட்சம் பெறுதியான கேரள கஞ்சாக்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like