இராணுவத்தின் பெயரால் அழைக்கப்படும் தமிழரின் பிரதேசம் : மக்கள் விசனம்

2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டத்தினை அடுத்து இராணுவத்தினரின் கெடுபிடி வடக்கில் அதிகரித்தே காணப்படுகின்றது.

குறிப்பாக யுத்தம் முடிந்து தற்போது 7 வருடங்கள் கடந்து சென்றுள்ள போதும் மக்களின் காணிகளை அவர்களிடம் வழங்காமல் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு தற்போதும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை இராணுவத்தினர் விடிவிக்காத நிலையில் குறித்த பிரதேசம் முதல், பிற இடங்கள் வரையில் போராட்டங்கள் வெடித்து வருகின்றது.

இது ஒருபுறம் இருக்க, கேப்பாப்புலவு பகுதி பல 100 வருடங்களாக தமிழ் மக்களின் பிரதேசமாக காணப்படும் பகுதிக்கு இராணுவத்தினர் தமது பெயர்களை சூட்டியுள்ளதை காணமுடிகின்றது.

மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட நிதிக்கமைவாக கட்டப்பட்ட கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தின் பெயரே “பிரிகேடியர் சமரசிங்க வீதி “என பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளுக்கு யுத்தத்தினை கரணம் காட்டி நுழைந்த இராணுவத்தினர் தமது பெயர்களை பிரபலப்படுத்தும் முகமாக இவ்வாறு பெயர் பலகைகளை அமைப்பது எந்த விதத்தில் நிஜாயம் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் தற்போது தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து பகுதிகளையும் தன்வசமாக்குவதுதான் பெரும்பான்மையினரின் நோக்கமா என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளும், சுதந்திரங்கள், மற்றும் அனைத்து செயற்பாடுகளும் மழுங்கடிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like