வவுனியா குளுமாட்டு சந்தியில் அனாதரவற்ற நிலையில் தனியார் பேரூந்து (படங்கள் இணைப்பு)

வவுனியா குளுமாட்டு சந்தியிலிருந்து மரக்காரம்பளை நோக்கி பயணிக்கும் பாதையில் தனியார் பேரூந்து ஒன்று கடந்த நான்கு நாட்களாக அனாதரவற்ற நிலையில் காணப்படுகின்றது.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த நான்கு நாட்களாக மரக்காளம்பளை வீதி காளி கோவிலுக்கு அருகே தனியார் பேரூந்து ஒன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதியில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாரை தொடர்பு கொண்ட போது,

இவ் தனியார் பேரூந்து இயந்திர கோளாறு காரணமாக தரித்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எனினும் கடந்த நான்கு நாட்களாக இவ் தனியார் பேரூந்து தரித்து நிறுத்தப்பட்டுள்மையினையால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

You might also like