கனகபுரம் துயிலுமில்லம் காணியின் வேலியை பிடுங்கி எறிந்தது பிரதேச செயலகம்

மாவீரர் துயிலுமில்லத்திற்கு வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டபோது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் குறித்த வேலி பிடிங்கி வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபர் ஒருவர் கூலியாட்களை கொண்டு கம்பி கட்டைகள் போட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அமைக்கப்பட்ட வேலிகளை பிடுங்கி எடுத்ததோடு, வேலி அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

You might also like