கிளிநொச்சி பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் ஆராய்வு

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்ட முன் மொழிவுகள் மற்றும் அமைவிடம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிகழவில் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன்,சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண நகர அபிவிருத்திப்பணிப்பாளர் ,வடமாகாண தனியார் போக்குவரத்து சபைத் தலைவர், தேசியபோக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மாவட்ட வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் கரைச்சிபிரதேச செயலாளர் கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

You might also like