பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

கிளிநொச்சி – பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி அண்மையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பாடசாலை முதல்வர் கு.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பா.உ சிவஞானம் சிறீதரனும், சிறப்பு விருந்தினராக அ.கிருபாகரனும் வருகைத்தந்திருந்தனர்.

பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசை முதன்முறையாக பயிற்றுவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை அன்பளித்த கிருபாகரனுக்கு சிறீதரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

You might also like