முல்லைத்தீவு காட்டுக்குள் புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு!

முல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை புலிகள்பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுபிடிக்கப்பட்டு குண்டுசெயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா்தெரிவித்துள்ளனா்.

ஒவ்வொரு எறிகணையும் 16 கிலோ கிராம் கொண்டது என்றும்விமானப்படையினா் தெரிவித்துள்ளனா்.

குறித்த அம்பகாமம் காட்டுப் பகுதிக்கு அருகில் தான் 2009 முன் விடுதலைப்புலிகள்பயன்படுத்தியவிமானப் படைத்தளம் காணப்படுகிறது.

தற்போது அது இலங்கை விமானப்படையினரின்பயன்பாட்டில் உள்ளது.

You might also like