கிளிநொச்சியில் பெண்ணொருவரை முட்டிவிட்டு தப்பிச்சென்ற பிக்கப் வாகனம்

கிளிநொச்சி டிப்போ சந்தியில் வீதி விதி முறைகளை மீறியவாறு வேகமாக பயணித்த வாகனம் ஒன்றில் மொதி பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

டிப்போ சந்தியை கடந்து செல்ல முற்பட்ட பிக்கப் வாகனம் ஒன்று எதிரே வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதன்போது மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பிலும் தப்பிச்சென்ற வாகனம் தொடர்பிலும் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like