போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்! களத்தில் குழந்தைகளின் பரிதாபநிலை!

சொந்த காணிகளைக் கோரி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

முல்லைத்தீவு-கேப்பாப்பிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த 31ஆம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை விடிய விடிய முற்றுகை போராட்டம் பொது மக்களினால் தொடரப்பட்டுகின்றது.

அவர்களில் ஒரு குழு செவ்வாய் கிழமை காலையில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்து தொடர்கின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள குழந்தைகளின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.

இந்த நிலை தொடருமாக இருந்தால் நல்லாட்சி அரசு பல்வோறு சிக்கலினை எதிர் கொள்ள வேண்டும் என்பது உண்மை.

மக்களின் வேண்டுகோள் நியாயமானது. இத்தகைய பின்னணியில் மக்கள் இன்று வரை போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

You might also like