எட்டு வயது சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி முறியடிப்பு: வவுனியாவில் சம்பவம்

வவுனியா மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி  மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று காலை குறித்த சிறுமி வீட்டிற்கு பின்பக்கம் நின்று விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள 45வயதுடைய நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதை சிறுமியின் சகோதரன் கண்டுள்ளார். இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது சம்பவத்தினை விசாரணை மேற்கொண்டபொலிசார் குறித்த சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like