கேப்பாப்புலவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை கையளிக்கக் கோரி இன்று 18வது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்புகளும் தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்களும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காலை ஒன்பது மணி முதல் கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like