கேப்பாபுலவு போராட்டத்தில் குளிர்காயும் மர்ம நபர்கள்…

தங்களது சொந்த காணிகளை மீட்டெடுப்பதற்காக கேப்பாபுலவு மக்களால் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வரை தொடர்கின்றது.

இந்த நிலையில் 18 நாட்களாக அந்த மக்களின் தண்ணீர் தேவையை தமது முயற்சியினால் தாமே பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்தில் தொடர்பில்லாத தனிப்பட்ட சிலர் தான் தண்ணீர் வழங்கி வருவதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு கூறி நிதி சேகரிக்க முயற்சிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த மக்களுக்கான நீர் விநியோகத்தினை நாளை தொடக்கம் வடக்கு மாகாண சபை பொறுப்பேற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like