சற்று முன் வவுனியா நகரசபை பூங்காவில் ஊஞ்சல் ஆடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி

வவுனியா நகரசபை பூங்காவில் இன்று ( 18.02.2017) மாலை சிறுவனோருவன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஊஞ்சல் உடைந்து வீழ்ந்து சிறுவனோருவன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரசபை பூங்காவில் இன்று மாலை கம்பியால் அமைக்கப்பட்ட ஊஞ்சலில்  மூன்று சிறுவர்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஊஞ்சல் அடியோடு பாரி வீழ்ந்ததில் இரு சிறுவர்கள் தெய்வதீனமாக காயங்களின்றி தப்பியதுடன் வவுனியா தமிழ் மத்திய மாகா வித்தியாலயத்தினை சேர்ந்த 11வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.

ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் ஆழமாக புதைக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபை, நெல்சிப் திட்டம் என்பன இணைந்து சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வடக்கு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like