கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு முன்னால் கள்ளுத் தவறணையில் கஞ்சாவும் சூதும்

கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள கள்ளுத் தவறணையில் கள்ளு குடிப்பதற்காக வருவபவர்கள் கள்ளுக் குடித்த பின் நிறை போதையில் இருந்து பல மாதங்களாகளுக்கு மேலாக சூது விளையாடுவது மட்டுமல்லாமல் கஞ்சா விற்பனையிலும் சிலர் ஈடுபடுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கசிப்பு போன்ற பல சட்டவிரோத செயற்ப்பாடுகளுக்குள் மாட்டுண்டு உள்ள சமூகத்தில் சிலரால் பல பிரச்சனைகளை அவர்களது குடும்பங்கள் எதிகொள்வதனை அனைவரும் அறிந்ததே

இதேபோல் கஞ்சாவும் பரவலாக விற்பனையாவதுடன் இப்பொழுது சாபக்கேடான சூது எனும் விளையாட்டும் நடைபெறுகின்றது.

எமது கிளிநொச்சி மண்ணின் பொலிஸார் உறக்கமா? அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனரா??

எமது சமூகம் நிம்மதியாக வாழவேண்டுமெனில் இச் செய்தியை அதிகம் பகிருங்கள்

You might also like