வவுனியாவில் முன்னாள் போராளி மனைவியால் அடித்துக்கொலை (படங்கள்)

வவுனியாவில் நேற்று (18.02.2017)  இரவு 11.00 மணியளவில் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான இலங்கராசா இளங்கோவன் (31வயது) மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் முன்னாள் போராளியாவார். விடுதலைப்புலிகளில் இணைந்து செயற்பட்டு வந்த “கோபு” என்ற முன்னாள் போராளியே அவரது வீட்டில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர்களின் உறவினர்களிடம் வினாவிய போது,

திருமணம் முடித்து 10வருடங்கள் கடந்துள்ள நிலையில் தினசரி இவர்களுக்கிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்ப்படுவது வழமை நேற்றைய தினம் ( 18.02.2017) இரவு 11.00மணியவில் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்ப்பட்டதாக உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் மனைவி தெரிவித்துள்ளார்.

எனினும் உறவினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த சமயத்தில் குறித்த  சடலம் தலையில் காயங்களுடன் நிலத்திலியே காணப்பட்டதாகவும் தாங்கள் குறித்த நபரின் மனைவியிடம் தூக்கில் தொங்கிய கயிறு மற்றும் தலையில் காயம் எவ்வாறு ஏற்ப்பட்டது. என்று வினவிய போது தூக்கில் தொங்கிய  நிலையில் கணவர் காணப்பட்ட போது கயிற்றினை கழற்ற முற்ப்பட்ட சமயத்தில் கயிறு அறுந்ததாகவும் அதன் போதே தரையில் வீழ்ந்து தலையில் காயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாரை வினாவிய போது,

நேற்று (19.02.2017) இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக எமக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தினை பார்வையிட்டதாகவும் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் தலையில் காயம் இருப்பதாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பதில் நீதவான் சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம்  சடலத்தை பார்வையிட்டதுடன் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like