வவுனியாவில் கவிஞர் ஜீ. எம். பரஞ்சோதி எழுதிய நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் வெளியீடு

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று (19.02.2017) மாலை 3.30மணியளவில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம், சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், மாவட்ட காலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், வவுனிய தேசியற்கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ந. பார்த்தீபன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு. எஸ். எஸ். வாசன், மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன், கௌரவ விருந்தினர்களாக திரு. சேனாதிராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவ்ர் திரு. சந்திரகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதற்பிரதியை ந. பார்த்தீபன் வெளியிட பிரதம விருந்தினர் செல்வம் அடைக்கலநாதன் பெற்றுக் கொண்டார்.
வவுனியா நுண்கலை மாணவர்களின் வரவேற்று நடனம், வேப்பங்குளம் சிறுவர் இல்ல அன்பகம் மாணவர்களின் நடன நிகழ்வு எனபன இடம்பெற்றது.