தொடரும் காணிமீட்பு போராட்டம்: மாணவர்களின் கல்வி நிலை…?

தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 20 நாட்களாக கேப்பாபிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள சிறுவர்கள் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பாடசாலை விடுமுறை என்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடயம். குறித்த போராட்டம் காரணமாக இந்த பகுதி மாணவர்கள் நீண்ட காலமாக பாடசாலைக்கு செல்லவில்லை.

இது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகியுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டதில் போர் சூழல் காணப்பட்டது. எனினும், அப்போது மாணவர்களின் குறிப்பாக சிறுவர்களின் கல்வி பாதிக்கும் நிலை காணப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டில் முல்லைத்திவு மாவட்டத்தில் போராட்டம் காரணமாக அதிக நாட்கள் சிறுவர்கள் பாடசாலை செல்லாமல் இருக்கும் போது,

பல ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டத்தினை ஆரம்பித்த வரலாறுகளை திரும்பிப்பார்க்கையில் கல்வியில் தரப்படுத்தலின் காரணதத்னால் அவர்கள் போராட்டத்தினை ஆரம்பித்தார்கள் என்று கூறப்படுகின்றது.

பல ஆண்டுகள் கடந்து வந்த இன்றைய நிலையில் மக்களின் பல்வேறு போராட்டங்களினால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைகின்றது.

ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களின் கல்வி நிலையை தரப்படுத்துவதற்கு மறைமுகமாக பேரினவாதிகளினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதை அனைவரும் உணரவேண்டியது அவசியம்.

இலங்கையில் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் இலங்கையில் இனப்பிரச்சினை தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like