ஐயன் ஐயப்பனாகிய அதிசயம் புதுக்குடியிருப்பில் சம்பவம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இற்றைக்கு 100 வருடத்துக்கு மேல் புதுக்குடியிருப்பு மக்கள் காவல் தெய்வமாக பரம்பரை பரம்பரையாக வழிவட்ட வந்த புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்திருக்கும் ஐயன்கோவில் தற்போது ஐயப்பன் கோவிலாக உருமாறியிருக்கின்றது.

மூதாதையர்கள் ஊரின் காவல் தெய்வமாக பூசித்து பூஜை செய்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஐயன் கோவில் கடந்த வருடத்திலிருந்து ஒருசில ஐயப்பன் பக்தர்களினால் ஐயப்பன் கோவிலாக உருமாற்றி ஐயனைக் கொலைசெய்து ஐயப்பனுக்கு ஆதரவு வழங்கி வழிபட்டு வருகின்றனர்.

ஊரில் ஐயப்பனுக்கு தனியாக ஒரு கோவில் கட்டி வழிபட்டால் சிறப்பு மாறாக பூர்வீகமாக வழிபட்ட ஐயனை விரட்டியடித்து அதே இடத்தில் ஐயப்பன் கோவிலை அமைப்பதை ஏற்கமுடியாதுள்ளதாக புதுக்குடியிருப்பு மக்கள் பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
ஐயனும், ஐயப்பனும் எமது மண்ணைக் காக்கவேண்டும். ஆனால் ஒருவரை அழித்து மற்றவரை பூசிப்பது சிறந்ததல்ல.

ஆகவே சமூகத்தில் அக்கறைகொண்ட சமூக ஆர்வலர்கள் குறித்த ஐயன்கோவில் தொடர்பாக கலந்தாலோசித்து ஐயப்பனுக்கு தனியாக வேறிடத்தில் கோவில் அமைப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே புதுக்குடியிருப்பு மக்களின் எதிர்பார்ப்பு

You might also like