வவுனியாவில் விசேடதேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் : 64 டப் ( lap) ம் வழங்கி வைப்பு

வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (20.02.2017) காலை 9.30மணியளவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு , 64 களப்பணியில் ஈடுபடும் பொது சுகாதார குடும்ப நல  உத்தியோகத்தர்களுக்கு டப் ( lap) ம் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கில் கிளிநொச்சி , மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இவ் செயற்த்திட்டத்தின் நான்காம் கட்டமாகவே இன்று வவுனியாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் எஸ் திருவாகரன் ( சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு) , வைத்தியர் கேசவன் ( சமுதாய மருத்துவ நிபுனர் – வடக்கு) , சுபாகரன் ( குழுத்தலைவர் – ஆசிய மன்றம் ) , பவானி ( பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) , பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள், பிராந்திய சேவைகள் பணிமணையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like