கேப்பாப்புலவு மக்களை தொடர்ந்து போராட்டத்தில் குதித்துள்ள பரவிப்பாஞ்சான் மக்கள்

இராணுவத்திடம் இருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் தொடர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்றிணைந்து இன்று காலை முதல் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறும், காணிகளை மீள கையளிக்குமாறும் வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இருப்பினும் பரவிப்பாஞ்சான் மக்களுடைய காணிகள் முற்றாக விடுவிக்கப்படவில்லை.

மக்களின் கோரிக்கைகளின் போது பரவிப்பாஞ்சான் காணிகளை முற்றாக விடுவிப்பதாக வாக்குறுதிகள் மட்டுமே அரசியல் வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும் வழங்கப்பட்டிருந்தது

ஆனால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டம் முற்றாக விடுவிக்கப்படும் வரை தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை நிரந்தரமாக விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களும் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like