கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கோணாவில் பிரதான வீதியில் இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் பத்து மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடமாகாண கல்வி அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில பாடசாலைகள் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கேப்பாப்புலவில் பல மாணவர்கள் இருபது நாட்களாக பாடசாலைக்கு செல்லாது வீதியில் நிற்கின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை இதுவரை தீர்த்து வைக்கப்படவில்லை.

இதனால் அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் யுத்தத்தால் தமிழ் மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது, தற்போதும் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு வழங்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் இராணுவமே எமது கல்வியை சீரழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும், எமது பாடசாலை உமக்கு படை முகாமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like