கிளிநொச்சி போராட்டத்தில் ஊடகவியலாளர்களை படம்பிடித்த இராணுவத்தினர்

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இன்று காலை முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் தங்களின் கையடக்க தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like