மாங்குளம் சந்தியில் விபத்து: மயிரிழையில் உயிர்த்தப்பிய சாரதி

இன்று (20.02.2017) 1.45 மணியளவில்  பால் கொள்வனவு செய்யும் நெஸ்லே வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்து இடம்பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கனகராயன்குளத்திலிருந்து மல்லாவிக்கு பால் கொள்வனவு செய்வதற்காக சென்று கொண்டிருந்த பால் வாகனம் மாங்குள சந்திக்கு முன்பு ஏ9 பிரதான வீதியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று தடம்புரண்டுள்ளது. வாகன சாரதி துரதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

நித்திரை தூக்கம் காரணமாகவே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like