ஈரப்பெரியகுளத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 98ஆடுகள் மீட்பு
ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 98 ஆடுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஆடுகளே ஈரப்பெரியகுளம் பொலிஸாரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.