கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்தார் அமைச்சர் டெனீஸ்வரன்

கிளிநொச்சியில் இன்று திங்கள் முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் டெனிஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால்
20-02-2017 திங்கள் காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு ஏழு மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடக்கு மாகாண போக்குவரத்து மீன் பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஆகியோர் சென்று சந்திதது கலந்துரையாடியுள்ளனர்.

You might also like