புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கலுக்கான ஆலோசனை கூட்டம்!

கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான வருடாந்த பொங்கலை முன்னிட்டு உற்சவ முன்னாயத்த ஆலோசனைக் கூட்டம் இன்று 20.02.2017 அன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்றது.

எதிர்வரும் 09.4.2017 அன்று நடைபெறவுள்ள இப்பொங்கல் விழாவுக்கான ஏற்பாட்டு கூட்டத்தில் பண்டமெடுத்தல்,சுகாதாரம், போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, குடிநீர், பாதுகாப், சிரமதானம், கடை வாடகை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன

ஆலய உற்சவ காலங்களில் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படுவதோடு மாற்றீடாக காகிதாகி பைகள் மற்றும் பனையோலை பெட்டிகளை பயன்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் தீன்பண்டங்கள்,குளிர்பானங்கள், குடிநீர் என்பவற்றின் சுகாதாரம் உச்ச அளவில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்;பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகண கல்வி அமைச்சர் .குருகுலராஜா வடமாகண சபை உறுப்பினர் பி.அரியரட்ணம் கண்டாவளை பிரதேச செயலாளர்
திரு.த.முகுந்தன் உதவி மாவட்ட செயலாளர் திரு.த.பிருந்தாகரன்ர உள்ளுராட்சி ஆணையாளர் கரைச்சி பிரதேச சபைசெயலாளர் மாவட்ட பொலிஸ் உதவி அத்தியட்சகர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் பக்கதர்கள என பலர் கலந்து கொண்டனர்.

You might also like