கிளிநொச்சி ‘TNA’ அலுவலகத்தில் வெடிகுண்டு? இன்று தீர்ப்பு!

கிளிநொச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் வெடிகுண்டு,வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு 13 மாதங்களாகச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டஅமைப்பாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறீதரனின் அப்போதைய பிரத்தியேகச் செயலாளராக இருந்த பொன்னம்பலம் லக்ஷமிகாந்தன் ஆகியோரது வழக்கு விசாரணைகளின் இறுதித் தீர்ப்பு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளது.

கடந்த 2013 ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்திற்கு கொழும்பிலிருந்து சென்றபயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அலுவலகக் கடமையில் இருந்த அ.வேழமாலிகிதனைஉடனடியாகவே கைது செய்து தமது வாகனத்துள் தடுத்து வைத்து விட்டு அலுவலகப்பணியாளர்கள் அனைவரையும் அப்படியே அலுவலகத்தின் முன்பக்கத்தில் கொண்டு வந்துஇருத்தி அசையக்கூடாது எனக்கூறி விட்டு ஆயுதம் தாங்கிய படையினரும் பொலிசாரும்பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து அலுவலகத்தை தேடுதல்நடத்துவதாகக் கூறி சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தினர்.

அதன் பின்னர் அங்குள்ள அறையொன்றிலிருந்துசொப்பிங் பாக்கினுள் வெடிமருந்து இருப்பதாகக் குறிப்பிட்டு அதனைஅங்கிருந்தவர்களுக்குக் காண்பித்து அலுவலகத்தை மூடி மீண்டும் தேடுதல் நடத்திஅன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் அங்கிருந்ததாக அவர்களால் கூறப்பட்ட சிறிதளவுவெடிமருந்தையும் எடுத்துக்கொண்டு கைதுசெய்து தடுத்து வைத்திருந்தவேழமாலிகிதனையும் கூட்டிச் சென்று கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில்தடுத்து வைத்திருந்த வேளை,

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அப்போதையபிரத்தியேகச் செயலாளரான பொ.*லக்ஷமிகாந்தன்* அவர்கள் தனிப்பட்டகாரணங்களுக்காகக் கொழும்புக்குச் சென்ற போது அவரையும் அங்கு வைத்துக் கைதுசெய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இருவரையும் 13 மாதங்களாக பயங்கரவாதக்குற்றத் தடுப்புப் பிரிவினரின் சிறையில் தடுத்து வைத்து விசாரித்துள்ளார்கள்.

பின்னர் இருவர் மீதுமுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குத் தகுந்தஆதாரங்கள், காரணங்கள் காணப்படாதமையால் இருவரும் 09.01.2014 அன்றைய தினம்நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இவ்வழக்கின் இறுதித்தீர்ப்பு இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால்வழங்கப்படவுள்ளது.

You might also like