வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் வேண்டும் : மக்கள் கோரிக்கை

தங்களின் சொந்த நிலங்களில் இருந்து விமானப்படையினர் வெளியேற வேண்டும் எனக்கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் பிலக்குடியிருப்பு மக்கள், போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 5 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு – பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் கடந்த 8 வருடங்களாக நிலை கொண்டிருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனக்கோரி கடந்த 20 நாட்களாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களுடைய கோரிக்கைக்கும்,போராட்டத்திற்கும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையிலேயே வடமாகாண மக்கள் ஒன்றிணைந்து தமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என மக்கள் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த தை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் எமது நிலத்திலிருந்து விமானப்படையை வெளியேற்றக்கோரியும், சொந்த நிலத்தில் எம்மை மீள்குடியேற்றக்கோரியும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.

மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றிணைந்து இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றோம். ஆனால் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் அறிவித்ததாக இல்லை.

இதேபோல் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான பதில்கள் கிடைக்கவில்லை.

பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட செயலகங்கள் முன்பாக 22ம் திகதி 10 மணி தொடக்க ம் 12 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துங்கள்.

அரசியல்ரீதியான அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்படாத நிலையில் மக்கள் போராட்டங் கள் ஊடான அழுத்தங்களே தற்போது தேவையாக உள்ளது என மக்கள் கோரிக்கை விடுத்திரு க்கின்றனர்.

You might also like