கிளிநொச்சியில் இன்று காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. செயலாளருக்கு மகஜர்

காணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு மகஜர் ஒன்றினை கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரினை அனுப்பிவைப்பதற்காக, கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்ட அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் போனோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையிலேயே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளின் உண்மை நிலையை கண்டறியும்வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like