தட்டுவன்கொட்டி பிரதான வீதியில் அமைக்கப்படும் பாலங்களை பார்வையிட்டார் அமைச்சர் டெனிஸ்வரன்

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தட்டுவன்கொட்டி பிரதான வீதி வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானதாக இருக்கும் சந்தர்ப்பத்தில் கடந்த வருடம் ஆயிரம் பாலம் திட்டத்தினுள் குறித்த வீதியின் இரண்டு பாலங்கள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் அமைசர் பா.டெனிஸ்வரன் அவர்களது அறிவுறுத்தலுக்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்டு அதன் ஒரு பாலத்திற்கான வேலை பூர்த்தியாக்கப்பட்டுள்ளதையும், மற்றய பாலத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதையும் 20/02/2017 அன்று தட்டுவன்கொட்டி கிராமத்திற்கான விஜயத்தின்போது பார்வையிட்டார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைசர் பா.டெனிஸ்வரன் அவர்கள்.
அவ்வேளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் கண்டாவளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.