வவுனியாவில் காணாமற்போன உறவினர்கள் மீண்டும் தொடர் போராட்டம் நடாத்த தீர்மானம்

வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்று(21) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்தாலோசித்த போதே இம் முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் உணவு தவிர்ப்பினை மேற்கொண்ட போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியைடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை கைவிட்டிருந்தனர்.

You might also like