கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட பாரதிபுரத்தில் கால்நடைப் பண்ணையாளர்களுக்கான கலந்துரையாடல்

கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கனகாம்பிக்கைக்குளம், பாரதிபுரம் மலையாளபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களான பொன்னகர், இந்துபுரம், செல்வபுரம் மற்றும் திருமுறிகண்டி ஆகிய கிராமங்களின் கால்நடை வளர்ப்போருக்கான அமைப்புக்கள் இணைந்து, கால்நடைகளுக்கு ஏற்படும் இடர்களை தெரியப்படுத்தும் மேற்படி கலந்துரையாடல், கிளிநொச்சி கரைச்சி பாரதிபுரம் மத்திபொதுநோக்கு மண்டபத்தில் அன்றையதினம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அதிகளவானோரின் வாழ்வாதாரத் தொழிலாக கால்நடை வளர்ப்புக் காணப்படுகின்றது. இவ் எண்ணிக்கை  அதிகரித்தும் வருகின்றது.

கால்நடைகளுக்கு உரிய மேச்சல் தரவைகள் இன்மையால் கால்நடை வளர்ப்போர், பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருகின்ற அதேவேளை, தங்களுடைய மாதாந்த வருமானத்தையும் இழப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

You might also like