கிளிநொச்சியில் மூன்றாவது நாளாக போராட்டம் : நேரில் சென்ற ஆனந்தசங்கரி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் போனோரின் உறவினர்கள், தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு தினங்களாக போராட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

மேலும் தமது கோரிக்கைகளை உள்ளடக்கி ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு மகஜர் ஒன்றினை கையளிக்கக்கோரி நேற்று கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்ட அலுவலகத்தில் மகஜரினை கையளித்திருந்தனர்.

இதேவேளை குறித்த மக்களை நேற்று பிற்பகல் வடமாகாண சபை உறுப்பினர்களான மயூரன், மயில்வாகனம் தியாகராஜா, இந்திரராஜா ஆகியோர் சநதித்து கலந்துரையாடினர்.

இந்நிலையில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி நேரில் சென்று கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

You might also like